Wednesday, April 25, 2018

சேவைக்குள் வலை...!

எஸ்.பி.பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் ஒழு செய்யும் கவுஸ் பக்கம், சுவற்றை சுற்றி வலை அடித்து வைத்திருக்கின்றோம் சேவைகளம் சார்பாக.

சுவற்றை சுற்றி வலை ஏன்?

பறவைகள் சுவற்றிலே அமர்ந்துவிட்டு கழிவுகளை விட்டுச்செல்வதால் ஒழு செய்யுமிடம் மிகவும் அசுத்தமானதாக காட்சியை பார்க்க நேரும். அதனை கருத்தில் கொண்டு சேவைகளத்தில் உள்ள அனைவருடைய பங்களிப்புடன் ஒழு செய்யும் கவுஸை சுற்றி மூன்றுபக்கமும் வலையினை அமைத்துவிட்டோம்.




பறவைகள் வருவதே தண்ணீர்காக தானே அதனை அடைத்துவிட்டால் எப்படி?

நல்ல கேள்வி.! பறவைகள் வருவதை தடுக்கவில்லை இன்னும் சொல்லபோனால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவதை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தி சொன்ன மார்க்கம் அதில் இருந்துக்கொண்டு நாம் அப்படி செய்வோமா? முதலில் சுத்தம் அவசியம். சுத்தம் இறைநம்பிக்கையில் பாதி அது உடல் சுத்தம், உடை சுத்தம், இருப்பிட சுத்தம் இதுபோன்று...
கடைசியாக, வலை அமைத்து வைத்திருப்பது பறவைகள் அந்த இடத்தில் உட்கார்ந்து அசுத்தம் பண்ணகூடாது என்பதை கருத்தில் கொண்டுதான்.


பின்பு பறவைகளுக்கு தண்ணீர்??

கவுஸின் எதிரே உள்ள சுவற்றிலே பறவைகள் அமராவண்ணம் மட்டுமே வலை அமைத்து வைத்திருக்கின்றோம் ஆனால் நம்முடைய பள்ளிவாசல் கவுஸில் பறவைகள் வந்து தண்ணீர் குடிப்பதற்கு போதிய வசதிகள் இருக்கின்றது. அவைகள் தினமும் தண்ணீர் அருந்துவது அழகிலும் அழகு!
மாஷா அல்லாஹ்!


-சேவைகளம்.


Friday, April 20, 2018

சுவையோ சுவை எங்க ஊரு தண்ணீர்...!

அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்....

18/04/2018 அன்று ஆழ்துளை கிணற்றிலிருந்து (Air compressor) தண்ணீரை வெளியே கொண்டுவந்து எங்களின் வெகுநாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம். அனைத்திற்கும் அல்லாஹ்வின் கிருபையே...

அதுபோக,

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தண்ணீர் சுவைமிகுந்ததாக இருப்பதை பார்க்கும் போது எங்கள் ஊர் எஸ்.பி.பட்டிணம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஜமாத்தார்கள், பல சங்கங்கள் , ஊர்மக்கள் அனைவருடைய பங்களிப்புடன் இணைந்து செயல்படுத்தி இருக்கின்றோம். ஒற்றுமையின் வெற்றி என்பதை இதன் மூலம் பார்க்கமுடியும்.

ஆழ்துளை கிணறு ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு பார்வை இன்ஷா அல்லாஹ் இத்தளத்திலே காண்போம்.


-சேவைகளம்.

Saturday, April 14, 2018

சேவையின் சேவை.

சேவையின் சேவை.!

நாம் இந்த வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக வாழ்ந்துவிட்டு செல்லவேண்டும். சேவை என்பது நமது செயலில் காட்டவேண்டும். மனிதர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். குறிப்பாக பிராணிகளிடம் இறக்கம் காட்டி அன்பு செலுத்த வேண்டும். நாளை மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் வந்தே தீரும். அப்படி இருக்கும் போது, நாம் ஏதோ நன்மை செய்தோம் என்பதை விட எல்லாம் நன்மையாகவே செய்தோம் என்பதாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்துக்கும் மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

’நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

எங்கள் ஊர் எஸ்.பி.பட்டிண மையவாடிக்கு செல்லும் வழியில் சிறு குட்டைபோல் சேற்று அதிகமாக காணப்படும் அதாவது கடலை ஒட்டி நீர் தேங்கி கண்ணாச்செடிகள் வளர்ந்து நிற்கும். அந்த நீர்த்தேக்க சேற்றிலே மாடு ஒன்று இரவிலே மாட்டி இறந்துகிடந்ததை காலையில் சேவைகளம் நண்பர்களுக்கு செய்தியாக வந்தது.

உடனே ஜேசிபி வரவழைத்து அந்த மாட்டை சேற்றிலிருந்து எடுத்து அதனை அடக்கம் செய்யப்பட்டது.

இதுபோல் இரண்டு, மூன்று மாடுகள் வெவ்வேறு நிலையில் வெவ்வேறு இடத்தில் இறந்து கிடந்த நிலையில் அதனை சேவை களம் நண்பர்கள் அடக்கம் செய்தார்கள் என்பதை இந்த இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

சேவை என்பது மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் சிறுகுச்சியை ஓரமாக போடுவதிலும் இருக்கின்றது...


-சேவை களம்.


Friday, April 13, 2018

நாங்க அப்படி தான் இரத்ததானம் வழங்குவோம்.! -சேவைகளம்

இரத்ததானம்...!

இஸ்லாம் மனித உயிர்கள் பாதுகாக்கப்படுவதை விரும்புகிறது.

திருக்குர்ஆனிலே சொல்லப்பட்ட...

"எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்”. (அல் குர்ஆன் 5:32)


என்ற குர்ஆன் வசனத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் பிறருக்கு உதவிகள் செய்வதை காணமுடியும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரத்தம் கொடுத்து உதவுவதில் இஸ்லாமியர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். அதுபோல் எங்களின் பங்கிற்கு எங்க ஊர் எஸ்.பி.பட்டிணத்தில் சேவைகளம் மருத்துவ குழுவின் டியர் கைஸ் சார்பாக இரத்ததான முகாம் வைத்து பல நூறு மக்கள் கலந்துக்கொண்டு குறிப்பாக மாணவர்கள் இரத்ததானத்தை வழங்கியதை பார்க்கமுடிந்தது.

வருடாவருடம் இரத்ததானம் கொடுப்பதில் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள  எஸ்.பி.பட்டிணம் என்ற ஊர் முதன்மை என்று வரும் காலம் தொலைவில் இல்லை.

-சேவைகளம்.

ஆழ்துளை கிணறு...!

எங்கள் ஊர் எஸ்.பி.பட்டிணத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கடைசி கட்ட பணியில் பணியாளர்களுடன் சுந்தரை சிங்கங்கள்!

சேவை களம் நிர்வாகக் குழுவின் பட்டியல்.!

சேவை களம் நிர்வாகக் குழுவின் பட்டியல்.!

சேவைகளம் நிர்வாகக்குழு

அமீர்: S.M.M.S. அஹமது இபுறாஹிம்
துணை அமீர்: P.S.A. பஷீர் அலி
இணை அமீர்: M. ராசிக் அலி

கௌரவ ஆலோசகர்கள்:
P.N.A. ஜின்னா ஆலிம்
R.K.R.B.M. மஃரூப்
M. சேக் தாவூத்

ஒருங்கிணைப்பாளர்கள்:
P.S.A. ஹைதர் அலி
N.R.N.H. கமருதீன்
K.N.E.A. பௌசுல் ஹக்

செயலாளர்: M.N. 'மும்பை' முஹம்மது ஷாஜஹான்.
பொருளாளர்: S. அமீர் அப்பாஸ்

துணை செயலாளர்: S.R.Y.K. முஹம்மது யூசுப்
துணை பொருளாளர்: E.K.A.R. நிஜாமுதீன்
இணை செயலாளர்: V.R.S. மஜீத்

ஆலோசகர்கள்:
S.R.M.S. ஷாஜஹான்
P.S.A. தௌலத் அலி ஆலிம்
K.M.S. கலந்தர் அலி

செய்தி தொடர்பாளர்:
N.M. சகுபர் அலி
P.S.A. முஹம்மது இசாக்

செயற்குழு உறுப்பினர்கள்:
T.K.S. சாகுல் ஹமீது (எஸ்.பி.பி. ஸ்டார்ஸ்)
M.K.A.K. பரக்கத் அலி (டியர் கைஸ்)
N. முஹம்மது ரபீக் (நண்பர்கள் இயக்கம்)
V.R.S. பாய்ஸ் அலி (ஃப்ளை கைஸ்)
S. ரியாஸ் முஹம்மது (ப்ளாக் ஸ்டார்)
R.K.R.N.I. முபாரக் (ப்ரண்ட்ஸ் பவர் கைஸ்)
M.A.S. சதாம் உசேன் (சன் ஸ்டார் கைஸ்)
V.R.S. ரிழ்வான் (வெல்டன் பாய்ஸ் குரூப்)
S.P.A.A. உசேன் அஹமது (நியூ கைஸ்)
N.N.M.M. நெய்னார் உசேன் (நியூ ராக்கர்ஸ்)
K.N.E.A. ஆசிக் ரஹ்மான் (நஜ்முல் இஸ்லாம் எஜுகேஷன் சர்வீஸ்)
S. ஆசிக் (லேட்டஸ்ட் கைஸ்)
S.M.R. அசாருதீன் (ஸ்மார்ட் கைஸ்)
N.M. ஜப்பார் (ஹிமாயத்துல் இஸ்லாம்)
S.M.A.M. கலந்தர் அலி (இஜாஜ் பிரண்ட்ஸ் கைஸ்)
M.ராவுத்தர் நெய்னா முஹம்மது (நியூ கிங் ஸ்டார்)
மற்றும்

V.R.S. சேக் தாவூத்
T.K.S. ராஜ் முஹம்மது
E.O.B. அப்துல் ஹக்

-சேவைகளம்.

Monday, April 9, 2018

சேவை களத்தின் ஆனந்த அன்பளிப்பு...!

சேவை களத்தின் ஆனந்த அன்பளிப்பு...!


சேவை களத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ்  வருகிற நோன்பு பெருநாள் -2018 அன்று ஏழ்மை நிலையில் இருப்பவர்களை எண்ணி அவர்களுக்கு எங்களின் அன்பளிப்பை வழங்க இருக்கின்றோம்.

ஆம்...


اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏ 
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை”.
(அல்குர்ஆன் : 76:9)


ஒரு அன்பளிப்பு பையில்...
கறி- 1 கிலோ
அரிசி- 2 கிலோ
எண்ணெய்- அரை லிட்டர்
மசாலா- 50 கிராம்
முந்திரி & திராட்சை- 25 கிராம்
சேமியா- 100 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்.

ஆக இவை அனைத்தும் நாங்கள் கொடுக்கபோகும் ஒரு அன்பளிப்பு பையில் இடம்பெற போககூடியவை. நாங்கள் தோராயமாக 150 பைகள் என்று எண்ணிக்கை வைத்துள்ளோம். அதாவது ஒரு பைக்கு ரூபாய் 750 நிர்ணயித்து 150 பைகள் கொடுக்கலாம் என்று முடிவுசெய்து வைத்துள்ளோம். அல்லாஹ் மிகப்பெரியவன் இந்த பைகளின் எண்ணிக்கை கூடலாம்.

எங்களின் சேவைகள் தொடர உங்களின் துஆ முக்கியம்.


-சேவை களம்.




Sunday, April 8, 2018

குர்பானிக் களத்தில் சேவைகளம்.


குர்பானிக் களத்தில் சேவைகளம்...

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் என்றாலே தியாகத்தின் நினைவை கண்முன்னே காட்டக்கூடிய நாள். அன்று நாம் தியாகத்தின் வெளிப்பாடாக ஆட்டையோ, மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ அறுத்து குர்பானி கொடுக்கின்றோம்.

நாம் கொடுக்கும் குர்பானியின் நோக்கம் இறையச்சமேத் தவிர, வேறில்லை.

"(எனினும்) குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (திருக்குர்ஆன் 22:37)

இந்த வசனம் குர்பானியின் உண்மையான நோக்கத்தைத் அழகாக விளக்குகிறது.

ஒருமிக உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த குர்பானியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளில் கொடுத்து வந்ததை நபிமொழி தொகுப்புக்களில் காண முடியும்.

"எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (திருக்குர்ஆன் 108:2)


கடந்த ஆண்டு எங்கள் ஊர் எஸ்.பி.பட்டிணத்தில் குர்பானிகள் கொடுத்து கிழிக்கப்பட்ட கழிவுகளை தங்களின் சேவைதான் என்று 'சேவைகள'த்தின் ஒரு அங்கமான இணைந்த கைகள் சகோதரர்கள் அந்த கழிவுகளை அகற்றியவிதம் ஊரே மெச்சும் அளவிற்கு சென்றது. ஆம், ஒரு பிசிறுகூட இல்லாமல் குர்பானியின் கழிவுகளை சுத்தம் செய்து ஊரை தூய்மையாக மாற்றிவைத்ததை மறக்கமுடியா ஒன்று.

சேவை என்று வந்தாலே அதில் முகம் சுளிப்புகளுக்கு இடம் இல்லை என்பதை நிருபித்து காட்டிய சேவை இந்த சேவை.


-சேவைகளம்.

Wednesday, April 4, 2018

தண்ணீர்... தண்ணீர்...


தண்ணீர்.... தண்ணீர்....

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே தண்ணீரின் அருமையை தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் மற்ற மாவட்டத்தை விட, அதிலே எஸ்.பி.பட்டிணத்தில் தண்ணீர் கிடைப்பதில் மிகவும் சிரமம் அதிலும் நல்லதண்ணீர் கிடைப்பது சொல்லுவதற்கில்லை!

ஏன் இப்பொழுது சொல்கிறோம் என்றால் அப்படி தண்ணீர் கஷ்டம் இருந்தாலும் மற்றவர்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க 'தண்ணீர் இல்லை' என்று சொல்லாதவர்கள் சுந்தரை மக்கள்!

இதன் வெளிப்பாட்டினை ஊரின் வாசலிலேயும், ஊர்ரின் உட்புறமும் பார்க்கலாம். ஆம்  'சேவைகளத்தின்' தண்ணீர் தொட்டி.
எங்கள் ஊரை தேடி மருத்துவத்திற்கும்
எங்கள் ஊரை தேடி வங்கிக்கும்
எங்கள் ஊரை தேடி இன்னபிற தேவைகளுக்கும் வரும் மக்கள் இத்தண்ணீரை தாகம் தீரும் வரை அருந்திவிட்டு செல்வதை பார்க்க முடிகிறது.


சேவைகளத்தின் சேவைகள் தொடர்ந்தவண்ணம்.....

சேவைகள வீரர்களின் மாலைநேர விளையாட்டு

எஸ்.பி.பட்டிணம் விளையாட்டு திடலில்  இளைஞர்கள் மாலை நேரத்தில் தங்களது திறமையை தினமும் காட்டிவரும் இடம்.

இன்றைய ஆட்டம்;

மட்டை பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டை விளையாடி வருவதைதான் காண்கிறோம்.



'சேவைகள' இளைஞர்களிடம் பல திறமைகள் புதைந்துள்ளதை காணமுடியும்.

சிசிடிவி (CCTV Closed Circuit Television)



சிசிடிவி (CCTV Closed Circuit Television)

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு வழக்காக இருந்தாலும் முக்கிய சாட்சியாக, துப்பறிய காட்சியாக காலத்திற்கேற்ப ஏற்ற கருவி சிசிடிவி. இது குற்றங்களை காட்சிபடுத்துவதற்கு மட்டும் அல்ல குற்றங்கள் நிகழாமல் இருக்கவும் சிசிடிவி பயன் தருவதாகவே இருக்கின்றது.

இப்பொழுது விசயத்திற்கு வருகிறோம். எங்கள் சேவைகளத்தின் சிறப்பான சேவையில் இந்த சிசிடிவியும் அடங்கும்.

எங்கள் ஊர் எஸ்.பி.பட்டிணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நாங்கள் எங்கள் 'சேவைகளத்தின் கல்வி குழு (NEST) சார்பாக சிசிடிவியை அமைத்து கொடுத்ததில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மறுமைக்காகவே நன்மைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
வெளியூரில் இருந்தும் குழந்தைகள் வந்து படிக்கிறார்கள். இதில் எந்த ஒரு பாகுபாடில்லாமல் அனைத்து மத குழந்தைகளும் கல்வி கற்கிறார்கள். எல்லாம் எங்களின் குழந்தைகள் அதனை கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள்  சார்பாக ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து, மேற்கொண்டு அல்லாவின் பாதுகாப்பில் விட்டுவைத்துள்ளோம்.

'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். – புகாரி




சேவை கள கைகளில் கைப்பந்து..!


கைபந்து போட்டி!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'சேவைகளம்' நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி 27/06/2017 சரியாக இரவு 8மணிக்கு தொடங்கியது. இதிலே எங்களின் மண்ணின் மைந்தர்கள் களத்திலே சிங்கத்தை போல் காட்சி அளித்தார்கள். புதிய வேகம், புதிய யுக்தி போன்ற புதிய நிலையில் எங்களின் சேவைகளத்தின் நிர்வாகிகளின் தூண்டுதலில் கைப்பந்து போட்டி சிறப்பாக நடந்துமுடிந்த.
சேவை என்று மட்டும் இல்லாமல் சேவையிலே வீரத்தையும் காட்டிய தருணம் இந்த கைப்பந்து போட்டி. முக்கியமாக இதிலே குறிப்பிட படவேண்டிய வர்கள். எஸ்.பி.பட்டிண ஜமாத்தார்களின் பங்களிப்பு மற்றும் நண்பர்கள் நற்பணி மன்ற சகோதரர்களின் பங்களிப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அல்லாஹ் பலமான முஃமினையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் நாம் நம்முடைய உடல்நலத்தையும் பேண வேண்டும். உடல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே சேவை மட்டும் இல்லாமல் உடல்நலத்திற்கு தேவையான வழுசேர்ப்பதுபோல் விளையாட்டையும் மறந்துவிடகூடாது அல்லவா?! ஹைர்... வருங்காலத்தில் உடல்பயிர்ச்சி மையமும் தொடங்க இருப்பதை இந்த தருனத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

'அங்க என்ன?'..

'யாருக்கோ உதவி தேவைபடுகிறதாம்'

'இதோ வந்துட்டோம் சேவைகளத்தில் இருந்து...'


-சாரி வேலை வந்துடுச்சு மீண்டும் சந்திப்போம்.

பேருந்து கால அட்டவணை

பேருந்து கால அட்டவணை:

சேவை களத்தின் சேவையில் விளைந்த கால அட்டவணை! ஆமாம் இது வரை எங்கள் நினைவு தெரிந்து எஸ்.பி.பட்டினத்தில் பேருந்து கால அட்டவணையை கண்டதில்லை. அதாவது இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை போக கூடிய பேருந்துகள், பட்டுக்கோட்டையில் இருந்து இராமநாதபுரம் போக கூடிய பேருந்துகள், எங்கள் ஊரில் இருந்து மற்ற மற்ற ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் எத்தனை வருகிறது? எந்த நேரத்தில் வருகிறது? என்பதை அறியாமல் இருந்துவந்தது அதனை கருத்தில் கொண்டு பேருந்து கால அட்டவணையை சேவைகளம் மூலமாக நாங்க செய்து முடித்தோம். இதன் மூலம் சரியான நேரத்திற்கு வரா பேருந்துகளை கண்காணித்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி அதனை சரிவர கொண்டுவர சேவைகள நண்பர்கள் மூலம் கண்காணக்கப்படுகிறது.

பேருந்து கால அட்டவணையின் செலவு ரூபாய் 15000/- இதனை எங்களின் கை பணத்தில் இருந்து பகிர்ந்து உருவாக்கி, மக்களின் தேவைக்கு வைத்ததில் நாங்கள் சிறுமகிழ்ச்சி அடைகிறோம். 

கிராம சபை கூட்டத்தில் சேவைகளம்!

கிராம சபை கூட்டம் : வருடத்தில் நான்கு நாட்கள் நடக்ககூடிய கிராம சபை கூட்டம் இன்று (மே 1, 2018) எஸ்.பி.பட்டிணத்தில் அதிகமான பொதுமக்க...