Tuesday, May 1, 2018

கிராம சபை கூட்டத்தில் சேவைகளம்!


கிராம சபை கூட்டம்:

வருடத்தில் நான்கு நாட்கள் நடக்ககூடிய கிராம சபை கூட்டம் இன்று (மே 1, 2018) எஸ்.பி.பட்டிணத்தில் அதிகமான பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் கலந்துக்கொண்டு வெகு விமர்சையாக நடந்துமுடிந்தது. 

இதிலே எங்கள் ஊர் ஜமாத் கௌரவ தலைவர் மரியாதைக்குறிய முக்தார் அவர்கள் ஊரின் பிரதிநிதியாக இருந்து ஊரின் தேவைகளை வந்திருந்த அதிகாரியிடம் முன்வைத்தார்கள்.  அதுமட்டும் அல்ல ஒவ்வொரு சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு அதனையும் அதிகாரியிடம் முன்வைத்தார்கள்.
அதுபோல் அதிகாரி நம்மிடம் சொன்னதகவல் 'எஸ்.பி.பட்டிணத்திற்கு என்று மொத்த இருப்பு 13லட்சம் இருப்பதாக' அதற்கு ஊர் ஜமாத் 'அந்த 13லட்சத்தில் என்ன என்ன ஊரின் முக்கிய தேவைகளை பூர்த்திசெய்யலாம்' என்று அதிகாரியிடம் எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபை எங்கள் ஊருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இளைஞர்கள் சேர்ந்து பல சேவைகள் செய்துகொண்டிருக்கிறோம். வாட்ஸ்அப் தளத்தை ஆக்கப்பூர்ணமாக மாற்றி அதிலே பல குரூப்களை தொடங்கி பல சங்கங்களாக அமைத்து ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்து தங்களின் சேவைகளை செய்துகொண்டு பல ஊர்களுக்கு எஸ்.பி.பட்டிணம் ஒரு முன்னுதாரனமான ஊராக இருந்துக்கொண்டிருக்கிறோம்.

இன்று குறிப்பாக கிராம சபை கூட்டத்தில் சேவைகளம் சார்பாக சில கோரிக்கைகளை நாங்களும் வைத்தோம்.

1) சாக்கடை: தெருவெங்கும் ஓடும் சாக்கடையை உடனடி சரிபார்த்தல்.

2) ஆர்.ஓ (R.O) ப்ளான்ட்: எஸ்.பி.பட்டிணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆர்.ஓ ப்ளான்டை உடனடியாக அமைத்தல்.

3) குடிநீர் குழாய்: இன்னும் குடிநீர் குழாய் இல்லாத தெருவிற்கு மற்றும் போதுமான குழாய் இல்லாத தெருவிற்கு உடனடியாக குழாய் அமைத்தல்.

4) தெரு விளக்கு: எரியாத மற்றும் தெரு விளக்கு இல்லாத தெருக்களை தெரிந்து தெருவிளக்கு அமைத்தல்.

5) மின் ஊழியர்: எஸ்.பி.பட்டிணத்திற்கு என்று தனியாக நிரந்தரமாக மின்வாரிய ஊழியர் அமைத்தல்.

6) தூய்மை: தெருக்கு தெரு கிடக்கும் குப்பைகளை சேகரிக்க குறைந்தது மூன்று வண்டிகள் ஏற்படுத்தி தருதல்.

7)விளையாட்டு மைதனம்: அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள இடத்தை விளையாட்டு மைதானமாக சீரமைத்து தருவதோடு வருடாவருடம் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் விளையாட்டு பொருட்களை பெற்று தருதல்.

இவை அனைத்தும் உடனடி தேவை என்பதை கருத்தில் கொண்டு, சேவைகளம் தங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் வழங்கியது.

-சேவைகளம்

கிராம சபை கூட்டத்தில் சேவைகளம்!

கிராம சபை கூட்டம் : வருடத்தில் நான்கு நாட்கள் நடக்ககூடிய கிராம சபை கூட்டம் இன்று (மே 1, 2018) எஸ்.பி.பட்டிணத்தில் அதிகமான பொதுமக்க...